நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். சமீபத்தில் கூட கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் மூலம் உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு வருகின்றனர். குறுகிய நாட்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
அதேசமயம் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் திடீரென சந்தித்திருந்தார். எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது புதுச்சேரி அரசு நடிகர் விஜய்க்கு, கடற்கரை ஓரம் இருக்கும் இடத்தை 99 வருட லீசுக்கு கொடுக்கிறதாம். அந்த இடத்தில் நடிகர் விஜய் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப் போகிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.