Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிக்கும் 'புஷ்பா 2'.... இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா நடிக்கும் ‘புஷ்பா 2’…. இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்ட திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிக்கும் 'புஷ்பா 2'.... இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இதன் மாபெரும் வெற்றியை கடந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து புஷ்பா புஷ்பா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சுசெகி (The Couple song) எனும் இரண்டாவது பாடல் வருகின்றமே 29ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ