Homeசெய்திகள்சினிமாஅபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

-

நடிகர் ரஜினி அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வந்தார். அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!இந்த படத்தை சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியிருந்த டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படமானது 2024 அக்டோபர் மாதத்தில் திரையிடப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினி தனது பகுதியை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து பிரேக்கில் இருந்த ரஜினி தனது ஓய்விற்காக அபுதாபி புறப்பட்டு சென்றார்.

அங்கு லுலு குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான எம் ஏ யூசுப் – ஐ நேரில் சந்தித்து அவருடன் ரோல்ஸ் ராய்ஸ் காரிலும் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் நடிகர் ரஜினி அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ