- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
மெரினா படத்தில் தொடங்கிய சிவகார்த்திகேயனின் சினிமா பயணம், இன்று வரை வெற்றிப்பயணமாக சென்று கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன் என அடுத்தடுத்து காமெடி கலாட்டா படங்களில் நடித்து வந்த சிவகார்த்தி, காக்கி சட்டை படத்தின் மூலம் ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார். இதை்தொடர்ந்து ரெமோ, டாக்டர் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்தியேன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன் மற்றும் அயலான்.
