Homeசெய்திகள்சினிமாஅமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை .... டீசர் குறித்த அறிவிப்பு!

அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த அறிவிப்பு!

-

அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை .... டீசர் குறித்த அறிவிப்பு!பிரபல இயக்குனர் அமீர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர். அதன் பின் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் கடந்த 2009இல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு பல படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் அமீர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயவலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அமீர் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். முதலில் இந்த படத்தை அமீரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தயாரித்தனர். ஆனால் தற்போது வெற்றிமாறனும், அமீரும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பாக இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை .... டீசர் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் மாயவலை படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவிலர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த டீசரை வெற்றிமாறன், சேரன், கரு. பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் இணைந்து வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ