spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'காந்தா' படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

‘காந்தா’ படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

-

- Advertisement -

காந்தா படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.'காந்தா' படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று (நவம்பர் 14ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் காந்தா. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்க துல்கர் சல்மானும், ராணா டகுபதியும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜானு சந்தர் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பழம்பெரும் நடிகரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் துல்கர் சல்மான், நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் ஒரு நடிகராக நடித்திருக்கிறார். இயக்குனராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையிலான ஈகோவை காட்டும் விதமாக சுவாரஸ்யமான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல் துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகின்றனர். படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பிளஸ் பாயிண்ட்களாக அமைந்துள்ளது.'காந்தா' படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ.10.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் இந்த படம் இனிவரும் நாட்களில் அதைவிட அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ