Homeசெய்திகள்சினிமாபிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் காலமானார்

-

இரண்டு முறை எம்மி விருது வென்றவரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான ஆண்ட்ரே ப்ராவர் உடல் நலைக்குறைவு காரணாக உயிரிழந்தார்.

புளூக்ளின் 99 மற்றும் ஹோமிசைட் லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட் உள்ளிட்டவை உலகளவில் ஆண்ட்ரேவை பிரபலப்படுத்தியது. அதிலும் புளூக்ளின் 99 நகைச்சுவை தொடரில் கேப்டன் ரேமண்ட் என்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருப்பார். கண்டிப்புக்கு குறையில்லாத வகையிலும், காமெடி கலந்துமாக புனையப்பட்ட அவரது கதாபாத்திரத்துக்கு என்ற தனி ரசிகர்கள் உள்ளனர். ’ஹோமிசைட்: லைஃப் ஆன் ஸ்ட்ரீட்’ என்ற தொடருக்காக 1998-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான எம்மி விருதை ஆண்ட்ரே பெற்றார். தொடர்ந்து தீஃப் தொடருக்காக 2006ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான எம்மி விருதை இண்டாவது முறையாக தட்டிச் சென்றார்.

இணைய தொடர்கள் மட்டுமன்றி, ‘சிட்டி ஆஃப் ஏஞ்சல்ஸ்’,‘ப்ரைமல் ஃபியர்’, ‘தி மிஸ்ட்’, ‘ஃப்ரீக்வென்ஸி’, ‘பொஸீடன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் புகழ் பெற்றார்.

இதனிடையே கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவிலிருந்து விலகி, ஓய்வில் இருந்தார். இந்நிலையில் திடீரென அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்ட்ரே ப்ராவருக்கு 62 வயது ஆகிறது. அவரது தகவல் தொடர்பாளர் இறந்த தகவலை வெளியிட்டு உள்ளார். ஆண்ட்ரே மறைவுக்கு ஹாலிவுட் திரை உலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ