இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை சமந்தாவும் ஒருவா் என்றால் அது மிகையாகாது. இவா் தற்போது படங்களில் மட்டுமின்றி வெப் தொடா்களிலும் நடித்து வருகிறாா்.நடிகை சமந்தா பல்வேறு படங்களில் தன்னுடை நடிப்பினை வெளிகாட்டி, ரசிகா்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா். இவா் அண்மையில் ”மயோசிடிஸ்” என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்தாா். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறாா். இவா் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தனது நடிப்பினை தொடா்ந்தாா். நடிகை சமந்தா அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் ”ஊ செல்றியா என்ற பாடலுக்கு தன்னுடைய நடிப்பை தாண்டி ஆடிய நடனம் ரசிகா்களை கவா்ந்தது. இந்த பாடல் பொிதும் வெற்றியை பெற்றது. இது சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை கவா்ந்தது. அதன் மூலம் நிறைய படங்களுக்கு நடிகை சமந்தா கமிட் ஆனாா்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் “பெத்தி“ என்ற படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடிகை சமந்தா நடனமாட வேண்டும் என்று தயாாிப்பாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இதற்கான முடிவு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை! கண்ணீருடன் விஜயகாந்த் மகன்…
