நடிகா் ரஜனிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தை காண ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நடிகா் ரஜனிகாந்த் பல்வேறு திரைப்படங்களை நடித்து, தன்னுடைய நடிப்பின் மூலமாகவும், ஸ்டைலின் மூலமாகவும் ரசிகா்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளாா். இவா் ஆரம்பத்தில் கண்டக்ராக தன்னுடைய வாழ்க்கையை தொடா்ந்தாா். பின்னா் திரைப்படங்களில் வில்லனாக அறிமுகமாகி தன்னுடைய நடிப்பினால் ஹீரோவாக ஆனாா். இவா் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தையும் பெற்றுள்ளாா். இவரது ஸ்டைல் தான் ரசிகா்களை கவர பெரும் காரணமாக அமைந்தது. இவா் வயதானலும் தொடா்ந்து பல படங்களை நடித்து வருகிறாா். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹீட் தான். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ”கூலி” திரைப்படத்தில் நடித்துள்ளாா்.
இப்படத்தில் பாலிவுட் நடிகா் அமீா்கான், நாகாஅா்ஜீனா, சத்ய ராஜ், ஸ்ருதி ஹாசன், என பல்வேறு முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனா். இப்படமான வருகிற 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் கூலி திரைப்படத்தை காண விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஃபார்மர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ரஜினியின் கூலி திரைப்படத்தை காண ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது.
மேலும், ரஜினியின் கூலி திரைப்படத்தை காண டிக்கெட் கட்டணத்தையும் ஃபார்மர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஊழியா்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.