spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் - திருமாவளவன்

பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்

-

- Advertisement -

பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் அவர்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் - திருமாவளவன்முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் பொது கூட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்றது. இதில் திமுக அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,

we-r-hiring

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தை தங்களுக்கு தோதுவாக வளைத்து தில்லுமுல்லு செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது அவ்வப்போது ஒரு யூகமாக சொல்லப்பட்டு வந்தது. இப்போது ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தி அவர்கள் அதை அம்பலப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டிலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித்ஷா சொல்லி இருப்பார் என்ற ஒரு ஐயத்தை உருவாக்குகிறது.

SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பேரணி நடத்த இருக்கிறோம். இது மிகப்பெரும் ஆபத்து. ஜனநாயகத்திற்கு எதிரானது. அனைத்து தரப்பு  ஜனநாயக சக்திகளும் பாஜகவின் தில்லுமுல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய தேவை உள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதல்வரை சந்தித்து பேசினேன் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே என் நேரு பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த ஐந்து ஆறு மண்டலங்களைச் சார்ந்த 1900 தூய்மை பணியாளர்களை அதே திட்டத்தின் கீழ் மீண்டும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது வேண்டுகோள் 1953 பேர் என கூறுகிறார்கள் என்று சொல்லக்கூடிய அந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் அதற்கு மேற்பட்டு தேவைப்படுகிற அவுட்சோர்சிங் மூலமாக எடுத்துக் கொள்வது ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதை தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

மாநில அரசே ஒரு கல்விக்கொள்கையை வரையறுப்பு வெளியிட்டு இருக்கிறது. மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது. வரவேற்கிறோம். விடுதலைச் சிறுத்தை கட்சி தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து கருத்து சொல்லி வந்திருந்தது. திமுகவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கத்தக்கது பாராட்டுக்கள் என கூறினார்.

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

MUST READ