பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கால் தவறி விழுந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவா், பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினரா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் இல.கணேசன். இவா் சமீபத்தில் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினாா். இதில் முதலமைச்சரும், அவரது மனைவியும் உட்பட பல்வேறு தலைவா்களும், பங்கேற்றிருந்தனர். மணிப்பூர் மாநில ஆளுநராக 2021 ஆகஸ்ட் 27 முதல் 2023 பிப்ரவரி 19 வரை மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு 2022 ஜூலை 18 முதல் 2022 நவம்பர் 17 வரை பணியாற்றினார். பின்னர் நாகாலாந்து மாநிலத்தின் 19வது ஆளுநராக 2023 பிப்ரவரி 20 முதல் பதவி ஏற்றார்.
இந்நிலையில் நாகலாந்து ஆளுநராக இருந்தாலும் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததால், பலத்த காயம் ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளாா். இவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்



