Homeசெய்திகள்சினிமாரெடியாகும் அனிமல் பாகம் 2... படத்தின் தலைப்பு இதுதானா???

ரெடியாகும் அனிமல் பாகம் 2… படத்தின் தலைப்பு இதுதானா???

-

- Advertisement -
அனிமல் பாகம் 2 உருவாகி வருவதாகவும், படத்திற்கு தலைப்பும் வைத்துவிட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார். இதில், கியாரா அத்வாணி, ஷாகித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தீப் ரெட்டி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை 750 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது. அமெரிக்காவில் அனிமல் திரைப்படத்திற்கு வசூல் குவிந்து வருகிறது. தற்போது வரை 800 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அனிமல் திரைப்படம் நெருங்கி வருகிறது.

இந்நிலையில், அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக டி சீரிஸ் அறிவித்துள்ளது. மேலும், அதற்கு அனிமல் பார்க் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறது.

MUST READ