Homeசெய்திகள்சினிமாதயாரித்த படத்திற்கு நல்ல வரவேற்பு... வெற்றி விழா கொண்டாடிய ஏஆர் முருகதாஸ்!

தயாரித்த படத்திற்கு நல்ல வரவேற்பு… வெற்றி விழா கொண்டாடிய ஏஆர் முருகதாஸ்!

-

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947- ஆகஸ்ட் 16 படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் ஏஆர் முருகதாஸ் ‘ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல படங்களைத் தயாரித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘1947- ஆகஸ்ட் 16‘  படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கினார்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தை படத்தில் காண்பித்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

MUST READ