spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாகூர் தர்கா விழா.... ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு ஆட்டோவில் வந்து கலந்து கொண்டார்.
நாகூர் தர்கா விழா.... ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் நாகூர் தர்காவில் வருடா வருடம் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தியா முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த விழாவில் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் ஸ்தூபி இசையுடன் இவ்விழா தொடங்கப்படும்.

தற்போது 467 வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது.  இவ்விழாவிற்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர.ரஹ்மான் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். அவருக்கு பாதுகாப்பாக பாதுகாவலர்களும், போலீஸ் அதிகாரிகளும் அவரை தொடர்ந்து சென்றனர். நாகூர் தர்கா விழா.... ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான்!

we-r-hiring

கடந்த வருடமும் இவ்விழாவில் கலந்து கொள்ள காரில் சென்ற ஏ ஆர் ரகுமான் கூட்ட நெரிசல் காரணமாக நாகூர் தர்காவிற்கு ஆட்டோவில் தான் சென்றார். அப்போது பொதுமக்கள் பலரும் ஏ ஆர் ரகுமான் ஆட்டோவில் வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ ஆர் ரகுமான் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் அயலான், லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ