அஸ்திரம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 12B, லேசா லேசா, இயற்கை ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ஷாம் தற்போது அஸ்திரம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்க பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவிலும் கே சுந்தரமூர்த்தியின் இசையிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஷாமுடன் இணைந்து நிரா, நிழல்கள் ரவி, வெண்பா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 7ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டன.
பின்னர் படக்குழு சார்பில் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.