spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் 'இதயம் முரளி'.... நாளை வெளியாகும் முதல் பாடல்!

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’…. நாளை வெளியாகும் முதல் பாடல்!

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி'.... நாளை வெளியாகும் முதல் பாடல்!

தமிழ் சினிமாவில் அதர்வா பாணா காத்தாடி, பரதேசி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் டிஎன்ஏ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதர்வா. அதே சமயம் இவர், ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் உருவாகும் இதயம் முரளி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயடு லோஹர், நட்டி நட்ராஜ், நிஹாரிகா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

we-r-hiring

காதல்- நட்பு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இப்படத்தின் தலைப்பே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மார்ச் 21) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ