அட்லீயின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதைத்தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றிகண்ட அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி அடைந்தார். அதைத் தொடர்ந்து இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படமானது ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதன்படி இதன் படப்பிடிப்புகள் மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், தீபிகா படுகோன், மிர்ணாள் தாகூர் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படம் 2027 பொங்கலுக்கு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் சாய் அபியங்கருடன் இணைந்து எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், AA22xA6 படம் தொடர்பான பெரிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருவதோடு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


