Homeசெய்திகள்சினிமாஅட்லீ இயக்கத்தில் சல்மான் கான்... படத்தில் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்...

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான்… படத்தில் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்…

-

- Advertisement -
  
கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை சென்று இன்று வெற்றி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. தமிழில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி, அடுத்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீக்கு அடுத்து ஏறுமுகம் தான். விஜய்யுடன் அடுத்தடுத்து பல படங்களில்ல கமிட்டாகினார். இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்து தெறிபடத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பிகில் திரைப்படம் மற்றும் மெர்சல் திரைப்படங்களை இயக்கினார். இதில் மெர்சல் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி வசூல் செய்தது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி ப்ரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெறி படத்தின் இந்தி ரீமேக்கை ப்ரியா அட்லீ தயாரிக்கிறார்.
அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜூனை இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், சம்பள பிரச்சனை மற்றும் ஆந்திர அரசியல் காரணமாக இத்திரைப்படம் கைவிடப்பட்டது. இதனால், மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய அட்லீ, சல்மான் கானை இயக்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஒரு பிரம்மாண்ட படத்தின் அப்டேட் வௌியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

MUST READ