Homeசெய்திகள்சினிமாவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் 'பகவதி'!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் ‘பகவதி’!

-

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அந்த வகையில் தற்போது இவர் எனது 68வது திரைப்படமான கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் அதை தொடர்ந்து தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் 'பகவதி'!அதன் பிறகு நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது 50வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். நடிகர் விஜய்க்கு இந்த பிறந்தநாள் மிகவும் முக்கியமான பிறந்தநாளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக இந்த பிறந்த நாளை கொண்டாட உள்ளார் விஜய். சாதாரணமாகவே விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இப்போது அரசியல் கட்சித் தலைவராக விஜயின் பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் ஏகபோகமாக கொண்டாட உள்ளனர்.விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் 'பகவதி'!

அதை வேளையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படமும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஜெய், ரீமாசென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ வெங்கடேசு இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில் தேவா இதற்கு இசை அமைத்திருந்தார்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் 'பகவதி'!இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் 'பகவதி'!

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. அடுத்ததாக போக்கிரி திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகவதி திரைப்படமும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ள தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ