spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தடை.... பாஜக மனு!

சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கு தடை…. பாஜக மனு!

-

- Advertisement -

சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தடை.... பாஜக மனு! இதனை ஆர்யா தயாரித்திருக்கிறார். இந்த படம் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1,2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களை போல் ஹாரர் – காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், யாஷிகா, கீதிகா, மாறன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் நடிகர் சந்தானம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து கிஸ்ஸா எனும் பாடலும் வெளியானது. சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தடை.... பாஜக மனு!இந்த பாடலில் பெருமாளை அவமதித்ததாக கூறி பாஜக வழக்கறிஞர் சார்பில் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ள. அந்த மனுவில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் குமார், தன்னுடைய படங்களின் தலைப்பை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ