பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீா் மரணம் அவரது ரசிகா்கள் மத்தியிலும், சினிமாத் துறையிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா (42) மும்பையில் மாரடைப்பால் காலமானார். இவா் 2004-ல் முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்தில் சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் கேமியோ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாா். நாச் பாலியா டான்ஸ் ஷோ சீசன் 5 மற்றும் 7-ல் பங்கேற்றுள்ளார்.
மேலும், ஷெஃபாலி ஜரிவாலாவுக்கும், பராக் தியாகி என்பவருக்கும் 2015-ல் திருமணம் நடந்தது. பிரபல இசை வீடியோ காந்தா லகா மற்றும் இந்தி பிக்பாஸ் (சீசன் 13) நிகழ்ச்சி மூலம் ஷெஃபாலி ஜரிவாலா புகழ்பெற்றார். இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது கணவர் Parag Tyagi மற்றும் இரண்டு போ் உடனடியாக மும்பையில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷெஃபாலி ஜரிவாலா திடீா் மரணம் ரசிகர்களையும் மற்றும் சினிமா துறையையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக பாடகர் மிகா சிங் தனது இன்ஸ்டா பதிவில், “நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன், வருத்தமடைந்துள்ளேன், மேலும் கனத்த இதயத்தை உணர்கிறேன். எங்கள் அன்பு நட்சத்திரமும் எனது அன்புக்குரிய தோழியுமான ஷெஃபாலி ஜரிவாலா எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்னும் நம்ப முடியவில்லை. உங்கள் கருணை, புன்னகை மற்றும் மன உறுதிக்காக நீங்கள் எப்போதும் நினைவுகூறப்படுவீர்கள். ஓம் சாந்தி”, எனப் பதிவிட்டுள்ளார்.
உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்….