லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து “தலைவர் 171” படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஆக்சன் படமாக இப்படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ஏற்கனவே, தான் இயக்கிய படங்களின் ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்து பின் படப்பிடிப்புகளை நடத்தியதால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே படத்தை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அப்படங்களில் சில குறைகளும் இருந்தன.எனவே,தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதியை படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் மட்டுமே அறிவிக்கப் போவதாகவும், மேலும் லோகேஷின் படங்களில் இதுவரை நடிக்காத நடிகர்களையே தலைவர் 171ல் லோகேஷ் நடிக்க வைக்க போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்தப் படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படம் தான். இப்படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார். இவர் வில்லன் ரோலில் நடிக்கிறாரா இல்லை வேறு கதாபாத்திரமா என்பது பற்றி தெரியவில்லை. இருப்பினும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மிக மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் என செய்திகள் கசிந்துள்ளன. மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜும் தலைவர் 171 இல் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அணுகி உள்ளனர் படக்குழுவினர். ஆனால் ஷாருக்கான் தரப்பிலிருந்து, சமீபத்தில் பல படங்களில் கேமியோவாக தோன்றியதால் இப்படத்திலும் கேமியோ ரோலில் தோன்றுவது சரியாக இருக்காது எனக் கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில்தான் வேறொரு பாலிவுட் நடிகரை இந்த கேமியோ ரோலுக்கு நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ரன்வீர் சிங் இந்த கேமியோ ரோலில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுமையாக கூற வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் லோகேஷ் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரன்வீர் சிங்கை அணுகி படத்தின் முழு ஸ்கிரிப்டையும் கலந்துரையாடவுள்ளார். தலைவர் 171 ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை போலவே மற்ற மொழி நடிகர்கள் யாரேனும் இப்படத்தில் நடிக்கிறார்களா என்ற அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.