- Advertisement -
பழம்பெரும் கர்நாடக இசை கலைஞரும், மலையாள நடிகர் மனோஜ் ஜெயனின் தந்தையுமான கேஜி ஜெயன் காலமானார்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து புகழ்பெற்றவர் மனோஜ் கே.ஜெயன். தமிழில் தூள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, ஆணை, சுதேசி, திருட்டு பயலே, திமிரு, எல்லாம் அவன் செயல், பில்லா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது தந்தை கே.ஜி.ஜெயன், ஒரு கர்நாடக இசைக்கலைஞர். இவர், 1934-ம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பிறந்தவர். கேரளாவில் பிரபல ஜெயா – விஜயா இரட்டையர்களில் இவர் ஒருவர். மிக இளம் வயதிலேயே இசைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தால், ஜெயன், விஜயன் சகோரர்கள் கர்நாடக இசையை கற்று அதில் சிறந்து விளங்கினர்.


மேலும், இந்த கூட்டணியின் பக்தி பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும்போது, தினசரி கேஜி ஜெயன் பாடிய ஸ்ரீகோவில் நடை துறன்னு என்ற பாடல் ஒலிக்கப்படுகிறது. இது தினசரி வழக்கமாகவும் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இதுதவிர சில மலையாளப் பட பாடல்களையும் இவர் பாடி உள்ளார். இசையமைத்தும் இருக்கிறார்.



