spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள 'தமிழ்க்குடிமகன்'........ முக்கிய அப்டேட்!

இயக்குனர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ்க்குடிமகன்’…….. முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

பிரபல இயக்குனரான சேரன், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், முரண், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை, ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
தமிழ்க்குடிமகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில் சேரனுடன் இணைந்து, ஸ்ரீ பிரியங்கா, லால், தீபா, வேல்ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

we-r-hiring

லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு அதன் பின் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ