மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலாசங்கர். அஜித்தின் வேதாளம் படத்தில் தெலுங்கு ரீமேக்கான இப்படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது. இந்த படம் சிரஞ்சீவிக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். சிரஞ்சீவியின் 157 வது படமான இந்த புதிய படத்தை வசிஷ்தா என்பவர் எழுதி, இயக்குகிறார். யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது. சிரஞ்சீவியின் 68வது பிறந்த நாளான இன்று படத்தின் கான்செப்ட் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பஞ்சபூதங்களை வைத்து அந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளனர். இதன் மூலம் இப்படம் ஃபேண்டஸி கதைகளத்தில் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.