Homeசெய்திகள்சினிமாமெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

-

அண்மையில் பத்மவிபூஷண் விருது வென்ற நடிகர் சிரஞ்சீவியை கௌரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் பாராட்டு விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. 
தெலுங்கில் மெகா ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிரஞ்சீவி 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்‌ஷன் ஹீராவாக கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகா அவர் நடித்து வருகிறார். இவரது மகன் ராம்சரணும் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிரஞ்சீவி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் போலா சங்கர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது விஷ்வாம்பரா படத்தில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவி நடிக்கும் 156-வது திரைப்படமாகும். இதில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார்.

இதனிடையே நடிகர் சிரஞ்சீவிக்கு, பத்மவிபூஷண் விருதை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து திரையுலக நடிகர், நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும், சிரஞ்சீவி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், சிரஞ்சீவியை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிரம்மாண்டவிழா ஒன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சிரஞ்சீவி ரசிகர்கள் கலந்துகொண்டனர். சிரஞ்சீவியும் ரசிகரும் தொழில் அதிபருமான இம்தியாஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

MUST READ