spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!

கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!

-

- Advertisement -

கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்தின் மறைவிற்கு ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைதளங்களின் மூலமாகவும் நேரில் சென்று தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!அந்த வகையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மலர் தூவி, சூடம் ஏற்றி தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!அதே சமயம் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்தில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரம் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திய பின் விஜயகாந்த் குறித்து புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ