spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு.... திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு…. திரைப்பிரபலங்கள் இரங்கல்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு.... திரைப்பிரபலங்கள் இரங்கல்!

சின்னத்திரையில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். அதன் பின்னர் இவர் மாரி, வாயை மூடி பேசவும், விஸ்வாசம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பெயர் பெற்றார். மேலும் அம்பி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் மெல்ல மெல்ல குணமடைந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கிய இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு.... திரைப்பிரபலங்கள் இரங்கல்! அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் காலமானார். 46 வயதுடைய ரோபோ சங்கரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோபோ சங்கரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கதறி அழும் காட்சியை பார்க்கும் போது நெஞ்சம் துடிதுடிக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் ரோபோ சங்கரின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர்தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் என்னை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டு சென்றதால் நாளை நமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலம்பரசன் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்து விடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகிற்கும் ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமை மிக விரைவில் போய்விட்டது. அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நடிகர் கார்த்தி ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், “ஞாயிற்றுக்கிழமை நான் அவரிடம் பேசினேன். இப்போது அவர் இல்லை. அதுவும் திடீரென்று. இதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர் பலரையும் சிரிக்க வைத்தார். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தான் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ