spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமேசான் பிரைமில் வெளியாகும் 'கூலி'.... எப்போன்னு தெரியுமா?

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘கூலி’…. எப்போன்னு தெரியுமா?

-

- Advertisement -

கூலி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.அமேசான் பிரைமில் வெளியாகும் 'கூலி'.... எப்போன்னு தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். படத்தில் ரஜினி வழக்கம்போல் மாஸ் காட்டி இருந்தார். அவருடைய வின்டேஜ் லுக் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. நாகார்ஜுனா ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி இருந்தார். இது தவிர சௌபின் சாகிர் மற்றும் ரச்சிதா ராமின் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. மேலும் ஸ்ருதிஹாசன் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அமேசான் பிரைமில் வெளியாகும் 'கூலி'.... எப்போன்னு தெரியுமா? இவ்வாறு படத்தில் பல ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும் சில லாஜிக் மிஸ்டேக்குகள் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற காரணமாக அமைந்தது. இருப்பினும் இப்படம் ரூ. 500 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ