ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தனது 30வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். கடந்த 2012 இல் வெளியான ஜனதா கேரேஜ் படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா கூட்டணி தேவரா படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், கலையரசன் போன்றோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நந்தமுரி தரகா ராமராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படமானது அறிவித்த தேதிக்கு முன்னதாகவே அதாவது 2024 செப்டம்பர் 27 இல் வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படமும் செப்டம்பர் 27 அன்று தான் திரையிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படமும் செப்டம்பர் 27 இல் தான் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.