நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கடந்த 2017ல் ராஜ்கிரண் ரேவதி ஆகியோரின் நடிப்பில் ப. பாண்டி திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றார். அதை கடந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.
ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேசமயம் ராயன் படத்தின் ஒவ்வொரு போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ராயன் பட குழுவினர் இந்த படத்தை 2024 கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வந்தனர்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மே மாதமே படமானது வெளியாகும் என்று படமானது வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -


