spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

-

- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா, மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!அதைத்தொடர்ந்து சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் புறநானூறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. அதே சமயம் சுதா கொங்கரா, நடிகர் சிம்புவை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா, துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக குரு விக்ரமிடம் பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகின்றன. மேலும் தயாரிப்பாளரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கிறாராம். இருப்பினும் சுதா கொங்கரா முதலில் சூர்யாவின் புறநானூறு படத்தை இயக்குவாரா? அல்லது துருவ் விக்ரம் படத்தை இயக்குவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

we-r-hiring

நடிகர் துருவ் விக்ரம், ஆதித்யா வர்மா, மகான் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது மூன்றாவது படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ