Homeசெய்திகள்சினிமாபைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!

-

- Advertisement -

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளிவந்துள்ளது.

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!தற்போது இவர் பைசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் உடல் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துருவ் விக்ரம், நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்திருந்தது. துருவ் விக்ரம், நாக சைதன்யா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தினை கார்த்திக் வர்மா இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், துருவ் விக்ரம் அடுத்ததாக RX100 மற்றும் மங்கள்வாரம் ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தனது புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

MUST READ