spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதடைகளை தாண்டி துருவநட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர போராட்டம் - கௌதம் மேனன் உருக்கம்

தடைகளை தாண்டி துருவநட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர போராட்டம் – கௌதம் மேனன் உருக்கம்

-

- Advertisement -
கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதே சமயம் சமீபத்தில் முடிவுக்கு வந்த துருவ நட்சத்திரம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி மணி நேரங்களில் துருவ நட்சத்திரம் படத்திற்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டது.

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், கௌதம் மேனன் பெற்ற கடனை அடைத்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்ய முடியும். அதுவரை துருவ நட்சத்திரம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். நவம்பர் 29ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டிவிட்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 8- ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல தடைகளைத் தாண்டி துருவ நட்சத்திரம் படத்தை திரையில் கொண்டு வர படக்குழு போராடி வருவதாக கூறினார். படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனாலும், ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கௌதம் மேனன் கூறினார்.

MUST READ