spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா21 இயர்ஸ் ஆஃப் மௌனம் பேசியதே... ரசிகர்களுக்கும், சூர்யாவுக்கும் அமீர் நன்றி...

21 இயர்ஸ் ஆஃப் மௌனம் பேசியதே… ரசிகர்களுக்கும், சூர்யாவுக்கும் அமீர் நன்றி…

-

- Advertisement -

மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு அடைந்து இருப்பதை கொண்டாடும் ரசிகர்களுக்கும், சூர்யாவுக்கும் இயக்குநர் அமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா, த்ரிஷா, லைலா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் அனைவருக்குமே திரை துறையில் ஒரு புதிய வாசல் சிறந்தது. இயக்குநர் அமீருக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்நிலையில், மெளனம் பேசியதே படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் இந்த படத்தை ரசிகர்கள் நினைவு படுத்தி பாராட்டுவதைக் கண்டு நன்றி கடிதத்தை இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய மௌனம் பேசியதே தயாரிப்பாளருக்கு நன்றி. என்று அதில் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
we-r-hiring

மேலும், திரையில் என்னோடு பயணித்து வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா, உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள் என அமீர் குறிப்பிட்டுள்ளார.

MUST READ