- Advertisement -
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிட்லர் பட இயக்குநர் தனா, படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. கோலிவுட் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்து, 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் இருக்கிறார். இசை அமைப்பாளராக கோலிவுட்டில் கோட்டை கட்டிய விஜய் ஆண்டனியின் கவனம், நடிப்பின் பக்கம் திரும்பியது. நான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, கொலைகாரன், கொடியின் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.


விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ, வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையே, அவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஹிட்லர். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படைவீரன், வானம் கொட்டட்டும், ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கி உள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிடோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



