spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி மரணம்.... திரை உலகினர் அதிர்ச்சி!

இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி மரணம்…. திரை உலகினர் அதிர்ச்சி!

-

- Advertisement -

இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி நேற்று காலமானார்.

80 மற்றும் 90 காலகட்டத்தில் சிறந்த பெண் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் ஜெயதேவி. அது மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் வலம் வந்தவர். இவர் தனது 20 வயதிலிருந்தே சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். அதன்படி கிட்டத்தட்ட 15 திரைப்படங்களை இயக்கியுள்ளார். நலம் நலம் அறிய, ஆவல் பாசம் ஒரு வேஷம் விலாங்கு மீன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சில காரணங்களால் அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

we-r-hiring

அதேசமயம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஜெயதேவி மரணமடைந்தார். ஜெயதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ