Homeசெய்திகள்சினிமாத்ரிஷ்யம் ஹாலிவுட் ரீமேக் சர்ச்சை... இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம்...

த்ரிஷ்யம் ஹாலிவுட் ரீமேக் சர்ச்சை… இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம்…

-

த்ரிஷ்யம் படத்தின் ஹாலிவுட் ரீமேக் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் த்ரிஷ்யம். இத்திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் பெரும் வெற்றி பெற்றது. இரண்டாம் பாகமும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகி சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, சிங்கள மொழி, மற்றும் சீன மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வசூல் கண்டது. அண்மையில் த்ரிஷ்யம் திரைப்படம் ஆங்கிலத்திலும் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாலிவுட்டைச் சேர்ந்த பலர், இது இந்தியில் வெளியான த்ரிஷ்யம் படத்திற்கு கிடைத்த பெருமை என்று தெரிவித்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்பிற்கு கிடைத்த வெற்றி என மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு கருத்து பதிவிட்டனர். இதுகுறித்து பேசிய இயக்குநர் ஜீத்து ஜோசப், என்னுடைய இயக்கத்தில் வெளியான படம் ஒன்று ஹாலிவுட்டுக்கு செல்வது மிகவும் பெருமையாக உள்ளது. இது யுனிவர்சல் கதை அம்சம் கொண்ட படமாகும். சர்ச்சைகள் எழுந்தாலும், இதன் ஒரிஜினல் படமானது மோகன்லால் நடிப்பில், என்னுடைய இயக்கத்தில் வெளியானது என படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ