spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிடீரென விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா!

திடீரென விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வரும் இவர் பல பாடல்களையும் பாடி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார்.திடீரென விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா! இவர் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விடுதலை 2, ட்ரெயின், ஏஸ், மகாராஜா போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இவ்வாறு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியை அவருடைய அலுவலகத்திற்கு சென்று இயக்குனர் ராம்கோபால் வர்மா  சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். “விஜய் சேதுபதியை திரையில் பலமுறை பார்த்த பிறகு இறுதியாக அவரை நேரில் சந்தித்தேன். திரையில் இருப்பதைவிட உண்மையில் அவர் சிறந்தவர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மா விஜய் சேதுபதியை திடீரென சந்தித்தது எதற்காக? என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் இவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது என்ற தகவல்களும் உலா வருகின்றன.

we-r-hiring

இயக்குனர் ராம்கோபால் வர்மா பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ