Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் சுந்தர்.சி - யின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

இயக்குனர் சுந்தர்.சி – யின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

சுந்தர். சி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.இயக்குனர் சுந்தர்.சி - யின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! இவரது இயக்கத்தில் உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வல்லான் திரைப்படம் நாளை (ஜனவரி 24) திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார்.

மேலும் மூக்குத்தி அம்மன் 2, அரண்மனை 5 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சுந்தர். சி. இந்நிலையில் இவர், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி தனது 57 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக ரசிகர்களும் திரை பிரபலங்களும் சுந்தர். சிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேசமயம் சுந்தர். சி யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் சுந்தர். சியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சுந்தர். சி யின் பிறந்தநாள் விழாவில் இயக்குனர் மணிரத்னம், விஷால், யோகி பாபு, சூரி, வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் வாசு, விமல், ஆர் ஜே பாலாஜி, மீனா, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டு சுந்தர். சி-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ