Homeசெய்திகள்சினிமா'வெயில்' படத்தில் அப்படி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்..... வசந்தபாலன் பேச்சு!

‘வெயில்’ படத்தில் அப்படி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்….. வசந்தபாலன் பேச்சு!

-

- Advertisement -

கோலிவுட் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவருடைய இயக்கத்தின் வெளியான வெயில், அங்காடித்தெரு, அரவான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. 'வெயில்' படத்தில் அப்படி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்..... வசந்தபாலன் பேச்சு!இருப்பினும் சமீப காலமாக இவரது இயக்கத்தில் வெளியான சில படங்கள் எதிர்பார்க்க வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தான் வசந்த பாலன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதன்படி அவர், “பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சினிமாவில் நுழைந்த பின்னர் சாதி, அதிகாரம், தலித் குறித்த பார்வை முற்றிலும் மாறி இருக்கிறது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். 'வெயில்' படத்தில் அப்படி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்..... வசந்தபாலன் பேச்சு!நாம் சித்தரிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சிறுபான்மையினராக, தலித் கதாபாத்திரமாக இருக்கக் கூடாது என்பதிலும், இருபாலினரையும் மூன்றாம் பாலினத்தவரையும் எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனமாக, மிகக் கூர்மையாக ரஞ்சித் தன்னுடைய படங்களின் மூலம் எடுத்து வருவது மிக முக்கியமான விஷயம். அது மொத்த தமிழ் சினிமாவையும் மாற்றிவிட்டது. இனி திரைப்படங்களில் அரசியல் பேசும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ