Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதியது யார் தெரியுமா?

இளையராஜாவின் பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதியது யார் தெரியுமா?

-

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அன்று முதல் இன்று வரை தனது இசையினால் பலரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவருடைய இசையை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இளையராஜாவின் பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதியது யார் தெரியுமா?அதே சமயம் திரை பிரபலங்கள் பலரும் இவருடைய தீவிர ரசிகனாகவும் பக்தனாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பதால் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அந்தக் கனவு நனவாகிவிட்டது. அதன்படி நடிகர் தனுஷ் இளையராஜாவாக இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை நேற்று இளையராஜா, தனுஷ், கமல்ஹாசன் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டனர்.இளையராஜாவின் பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதியது யார் தெரியுமா? ஆகவே பலருக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் தான் இந்த பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளதாக அவரே கூறியிருக்கிறார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுது படம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வருகின்றனர்.

MUST READ