Homeசெய்திகள்சினிமா'டாக்ஸிக்' படத்தில் யாஷின் கேரக்டர் என்ன தெரியுமா?

‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் கேரக்டர் என்ன தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் யாஷ், கே ஜி எஃப் சாப்டர் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அந்த வகையில் இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.டாக்ஸிக் படத்தில் யாஷின் கேரக்டர் என்ன தெரியுமா? இவர் தற்போது ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் ராவணனாக நடித்து வருகிறார். மேலும் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தனது 19ஆவது படமான டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார் யாஷ். இந்த படத்தில் யாஷுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்க யாஷுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹுமா குரேஷி நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். தளபதி 69 படத்தை தயாரிக்கும் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில் படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜை உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டாக்ஸிக் படத்தில் யாஷின் கேரக்டர் என்ன தெரியுமா? இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் யாஷ், டானாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் யாஷ் இந்த படத்தில் வக்கீலாக நடித்து வருவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் நடிகர் யாஷ், வக்கீல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ