Homeசெய்திகள்சினிமாஅதை நம்பாதீர்கள்..... ஷாலினி அஜித்குமாரின் இன்ஸ்டா பதிவு!

அதை நம்பாதீர்கள்….. ஷாலினி அஜித்குமாரின் இன்ஸ்டா பதிவு!

-

- Advertisement -

நடிகை ஷாலினி, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அந்த வகையில் 1985 லிருந்தே நடிக்க தொடங்கினார். அதை நம்பாதீர்கள்..... ஷாலினி அஜித்குமாரின் இன்ஸ்டா பதிவு!பின்னர் கதாநாயகியாக உருவெடுத்த இவர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாள மொழியிலும் நடித்து பெயர் பெற்றவர். அதன்படி கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்திருக்கிறார் ஷாலினி. அதேசமயம் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வந்தவர். அதை தொடர்ந்து இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஜித் – ஷாலினி தம்பதி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இந்நிலையில் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது எக்ஸ் தளத்தில் ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் கணக்கு ஒன்று இயங்கி வருகிறது. அந்த கணக்கு போலியானது என்று தெரிவித்துள்ளார் ஷாலினி.அதை நம்பாதீர்கள்..... ஷாலினி அஜித்குமாரின் இன்ஸ்டா பதிவு! “இது என்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம். பின்பற்றவும் வேண்டாம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரபலங்களின் பெயரில் பல போலி கணக்குகள் தொடங்கப்பட்ட இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ