Homeசெய்திகள்சினிமாநாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!

-

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!

தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. எனவே வெளியூர்களில் இருக்கும் பலரும் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றனர். அதன்படி பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சம்பளத்துடன் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை மிஸ் பண்ணக் கூடாது எனும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!

இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், “நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 19) திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மாலை, மதியம், இரவு என நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. தேர்தலின் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதன் மூலம் ஏதேனும் பிரச்சனை வந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 1,126 திரையரங்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ