லக்கி பாஸ்கர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் சீதாராமம் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமானார். அந்த வகையில் தொடர்ந்து இவர் பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக கிங் ஆப் கோத்தா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் காந்தா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் துல்கர் சல்மான் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898AD திரைப்படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் துல்கர் சல்மான் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் லக்கி பாஸ்கர் எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் இசை அமைக்கும் பணிகளை கவனித்திருக்கிறார். நிமிஸ் ரவி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி போன்ற பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்களையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த படம் 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
- Advertisement -