Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்

வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கியவர் ஆவார். படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ