Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

-

- Advertisement -

திரைப்படப் பிரபல்யமும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.

we-r-hiring

கமல் தயாரிப்பு – சிவகுமார் முருகேசன் இயக்கம்
இத்திரைப்படத்தைக் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமால் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

களம் இறங்கும் சீமான்
ஏற்கனவே பல திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ள சீமான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் சேர்க்கை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘சேயோன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து கைதான இலங்கை நபர்: தாய்நாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

MUST READ