Homeசெய்திகள்சினிமாபிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்..... தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்….. தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!

-

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணமடைந்தார்.பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்..... தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!

நடிகர் டேனியல் பாலாஜியின் இயற்பெயர் டிசி பாலாஜி. ஆரம்பத்தில் சீரியலில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வந்தவர். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2007 இல் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா
என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 40க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர். இந்நிலையில் நேற்று இரவு டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக டேனியல் பாலாஜி கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்..... தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!அங்கு இவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பல முயற்சிகளை எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். 48 வயதுடைய டேனியல் பாலாஜியின் மறைவு திரை பிரபலங்களை அதிர்ச்சியில் மேலும் இவரின் மறைவிற்கு கௌதம் மேனன், வெற்றிமாறன், தனுஷ், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் டேனியல் பாலாஜி உயிருடன் இருக்கும் போதே ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வந்த நிலையில் தற்போது மறைந்த பிறகும் அவருடைய கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ