தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் டப்பிங் பணிகளையும் தொடங்கினார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வருகின்ற பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வருவதால் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களின் சந்திப்பில், “அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் ரொம்ப நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று பேசினார். அதன் பின்னர் அவரிடம், குட் பேட் அக்லி படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஃபர்ஸ்ட் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. அதை அனைவரும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
- Advertisement -